முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Muslims must be vigilant about Islam
July 11, 2017
මුස්ලිම්වරුන් ඉස්ලාම් දහම ගැන ප්රවේසම් විය යුතුය
July 11, 2017

இனிய இலங்கை முஸ்லிம் உறவுகளுக்கு,

இஸ்லாம் என்பதும் ஏனைய மதங்களை, மூட நம்பிக்கைகளைப் போன்ற இன்னொரு வெறும் நம்பிக்கை மட்டுமே என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வதுடன், இஸ்லாத்தை அளவு கடந்து நம்புவதனால் பிழையான வழியில் இட்டுச் செல்லப் படாதிருக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்களைப் போன்று நேற்று வரைக்கும் இஸ்லாம்தான் இறைவேதம் என்று நம்பி வாழ்ந்து வந்த நாம், இஸ்லாம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமேயன்றி, உண்மை அல்ல என்ற உண்மையை உணர்ந்துகொண்டதனால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினோம். இந்த நிலையில், எமது கடந்தகால அனுபவங்கள் மற்றும் உங்களது நிகழ்கால நடவடிக்கைகள், உங்களது நம்பிக்கைகளை மையமாக வைத்து நோக்குமிடத்து, இஸ்லாம் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருந்துகொள்ளும்படி அனைத்து மக்களினதும் நலன் மற்றும் நல்வாழ்வு கருதி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் பல்வேறு முனைகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும் இன்றைய காலகட்டத்தில், இஸ்லாத்தின் மீதான அதீத நம்பிக்கையால் தூண்டப்பட்டு வன்முறைகளில், தீவிரவாத செயற்பாடுகளில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட தரப்பினர் ஈடுபடுவது, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகள் மேலும் பலமடையவே உதவும்.

“இஸ்லாம் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம்” என்னும் மாயை உங்கள் உள்ளங்களில் உண்மை போன்று நம்பவைக்கப் பட்டுள்ளது. எனினும் எந்த இறைவனும் நேரில் வந்து உங்களிடம் இதனை கூறவில்லை, மாறாக உலமாக்கள் என்பவர்கள் இதனை உங்கள் உள்ளங்களில் நேரில் கண்ட உண்மை போன்று பதிய வைத்துள்ளார்கள்.

மதம் என்பது பல்லாயிரக்கணக்கான மில்லியன் டாலர் பணம் புழங்கும் வரிவிலக்குப் பெற்ற தொழில்துறையாக உள்ள நிலையில், அதன் மூலம் பலன் பெறும் தரப்புகள் நீங்கள் சுயமாக சிந்திப்பதனை ஒருபொழுதும் விரும்பப் போவதில்லை. அகில இலங்கை ஜமியத்துல் உலமா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் உங்களை மதம் சார்ந்த இருண்ட சிந்தனைக்குள் மூழ்க வைத்து இருப்பதிலேயே தங்களது இருப்பும், வளமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்பதை நன்றாக அறிவார்கள். ஆகவே, மத நம்பிக்கைகளை உங்கள் உள்ளங்களில் நீங்கள் உணர்ந்துகொள்ளத விதத்தில் தீவிரமாக விதைக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இதனால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் குறித்து அவதானமாக இருந்துகொள்ளுங்கள்.

இஸ்லாமிய மார்க்கம் ஆனது தீவிரவாதம், யுத்தங்கள், உயிரைக் கொடுத்து மதத்தை காப்பாற்றுதல், ஜிஹாத், அடிமைகள், பாலியல் அடிமைகள் போன்ற வன்முறை சார்ந்த, மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை தன்னகத்தே கொண்ட மதம் என்பதால், இஸ்லாம் குறித்த போதிய எச்சரிக்கை உணர்வின்றி இன்றி நீங்கள் அதனை தீவிரமாக பின்பற்ற முயலும் பொழுது அது உங்களை, நீங்கள் அறியாத விதத்தில் வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாக மாற்றி விடுகின்றது, ஏனெனில் இஸ்லாத்தின் இயல்பு அத்தகையதாகவே உள்ளது என்பதை முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை மற்றும் அதிகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னரான இஸ்லாமிய வரலாறு என்பன மிகத் தெளிவாகக் வெளிப்படுத்துகின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் பேருவளை பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவான தரப்பு மேற்கொண்ட வன்முறைகள், கடந்த ரமழான் நோன்பு காலத்தில் ஓட்டமாவடியில் இஸ்லாமிய பிரிவு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பெருநாள் தினத்தன்று தொழுகையின் பொழுது வவுனியாவில் ஒரு முஸ்லிம் தரப்பின் மீது இன்னொரு முஸ்லிம் தரப்பு மேற்கொண்ட வன்முறைகள், இலங்கையில் இருந்து சிரியா சென்று மரணித்த ISIS பயங்கரவாதிகளின் மரணங்கள் குறித்த செய்திகள் மற்றும் தற்பொழுது இஸ்லாமிய தேசம் (ISIS) பயங்கரவாதிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் போன்ற அனைத்துமே இலங்கை முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் அதீத இஸ்லாமிய நம்பிக்கையினால் வழிநடத்தப்பட்டதால் ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகளில் ஒரு சிலவற்றின் வெளிப்பாடுகளே ஆகும்.

நாம் அனைவரும் மனிதர்களாக, சுய சிந்தனை உள்ளவர்களாக, மனித நேயம் மிக்கவர்களாக வாழ வேண்டுமே தவிர, எவ்வித ஆதாரங்களும் அற்ற வெறும் நம்பிக்கை சார்ந்த மதவாத சிந்தனைகளால் தூண்டப்பட்டு, பிழையாக வழிநடத்தப்படும் வன்முறையாளர்களாக வாழக் கூடாது.

இஸ்லாம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே என்பதை உணர்ந்து சுயமாக சிந்தித்து வாழும்படியும், இஸ்லாத்தின் தீவிரத் தன்மை காரணமாக ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து உங்களையும், நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும், முஹம்மது நபியின் மதீனா வாழ்க்கயை பின்பற்றுவதையோ, அதனை கற்பிப்பதையோ முற்றாக தவிர்ந்து கொள்ளும்படியும், ஒரு காலத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள் என்ற வகையில் அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

– இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *