முன்னாள் முஸ்லிம்கள் ஓரணியாக இணைகின்றார்கள்

ලාංකික පූර්ව මුස්ලිම් ජාතිකයන් සංවිධානයක් වූ වගයි
January 11, 2017
Ex Muslims Come Out as a Group in Sri Lanka
January 11, 2017

இலங்கையைப் பொறுத்தவரை இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் இதுகால வரையும் தனிப்பட்டவர்களாக மட்டுமே  இருந்துவந்த நிலை மாறி, அவர்கள் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஓரணியில் இணைந்து செயல்பட தயாராகியுள்ளனர்.

உலகம் 2016 ஆம் ஆண்டிற்கு பிரியாவிடை வழங்க தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கையின் தலைநகரில், பகிரங்கப் படுத்தப்படாத இடமொன்றில் கூடிய இலங்கையின் முன்னாள் முஸ்லிம்கள் தமக்கான நிர்வாக மற்றும் செயற் குழுக்களை அமைத்து இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் ( Ex Muslims of Sri Lanka – EMSL ) என்னும் பெயரில் செயற்பட தீர்மானித்துள்ளனர். பாகிஸ்தான், மலேசியா உட்பட உலகின் பல நாடுகளிலும் முன்னாள் முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட அமைப்புகள் இருக்கின்ற பொழுதும், இலங்கையில் இப்படியான ஒரு அமைப்பு இதுவரைகாலமும் இருந்திருக்கவில்லை.

சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பகிரங்க அழைப்புகளைத் தொடர்ந்து, தொடர்பு கொண்டவர்களில், முன்னாள் முஸ்லிம்களாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்ட இளவயது முதல் அனுபவ வயது வரையான இரு பாலாரும் கலந்துகொண்ட முதலாவது ஒன்றுகூடல், முதலாவது பொதுக்கூட்டமாக ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டதுடன் வருடாந்த பொதுக் கூட்டத்தை ஒவ்வொரு வருடமும் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இஸ்லாத்தை விட்டு நான் ஏன் வெளியேறினேன்என்னும் தலைப்பில் ஒவ்வொருவரும் தமது தெரிவுகளுக்கான நியாயங்களையும், காரணிகளையும் முன்வைத்ததனர். மத நம்பிக்கையாளர் என்ற நிலையில் இருந்து மத நம்பிக்கையற்றவர் என்னும் நிலைக்கு மாறுவது என்னும் முடிவவை எடுப்பதற்கு பல தடவைகள் சிந்திக்க வேண்டியிருந்ததாகவும், மதத்திலிருந்தான வெளியேற்றம் மிக இலகுவான ஒன்றாக இருக்கவில்லை எனவும், அதற்கு அதிகபட்ச மன உறுதியும், தைரியமும் தேவைப்பட்டதாகவும் பலரும் தெரிவித்தனர்.

இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் (EMSL) அமைப்பின் உடனடி மற்றும், நீண்டகால திட்டங்கள் குறித்து வரைவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பதினோரு அம்சக் கோரிக்கை ஒன்றை இலங்கை அரசிற்கும்,  ஊடகங்களிற்கும், பொதுமக்களிற்கும் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. குறித்த பதினோரு அம்சக் கோரிக்கை காலக்கிரமத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது

2 Comments

  1. Shajahan says:

    வாழ்த்துக்கள்..!

  2. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *